25 ஆண்டாக போலீசுக்கு தண்ணி காட்டிய கொலை குற்றவாளி கைது: டெல்லி போலீசார் அதிரடி

லக்னோ: கிட்டதட்ட 25 ஆண்டுக்கு முன் நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை டெல்லி போலீசார் கைது செய்தனர். கடந்த 1997ம் ஆண்டு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் கிஷன் லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி தலைமறைவான நிலையில், அவரை கடந்த 25 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். ஆனால் கொலையாளி இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டம் கான்பூர் கிராமத்திற்கு போலீசார் சென்றனர்.

அங்கு காப்பீட்டு நிறுவன முகவராக செயல்பட்டு வந்த கொலையாளி ராமுவை போலீசார் அடையாளம் கண்டனர். அவனின் பின்னணி குறித்து சுற்றுவட்டாரப் பகுதியில் போலீசார் விசாரித்தனர். தற்போது லக்னோவின் ஜானகிபுரத்தில் இ-ரிக்‌ஷா ஓட்டிவந்த ராமுவை, அவரது மகன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ‘இ-ரிக்‌ஷா ஓட்டிவந்த ராமு, தனது ெபயரை அசோக் யாதவ் என்று மாற்றிக் கொண்டு 25 ஆண்டாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார். தற்போது கைது செய்யப்பட்ட அவர், கிஷன்லாலைக் கொன்றதை ஒப்புக் கொண்டார்’ என்றனர்.

Related Stories: