×

ஆவடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம்; அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

ஆவடி: ஆவடி மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் சா.மு.நாசர் இன்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் 1 முதல் 5 வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை சிற்றுண்டி திட்டத்தை கடந்த 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்று முதல் அனைத்து பள்ளிகளில் இந்த திட்டம் சிறப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மாநகராட்சி தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாட்டை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று காலை ஆய்வு செய்தார்.

அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தார். பின்னர், உணவின் தரம், சுவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, ‘சாப்பாட்டின் தரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, ஆவடி மேயர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Avadi Sathyamurthy Nagar ,Minister ,S. M. Nassar , Breakfast Program at Corporation School in Avadi Sathyamurthy Nagar; Minister S. M. Nassar study
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...