×

பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் குலதெய்வம் கோபித்துக்கொள்ளும்: விநோத விளக்கம் அளித்த பெண் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு..!!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் குலதெய்வம் கோபித்துக்கொள்ளும் என்று கூறிய பெண் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வருபவர் வேலுசாமி. இவர் மனைவி லட்சுமியுடன் ஒட்டன்சத்திரம் அருகே நாயக்கனூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த வாரம் வேலுசாமிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு கேட்டு ஒருவர் சென்றுள்ளார்.

அங்கு வேலுசாமியின் மனைவி லட்சுமி, வீடு வாடகைக்கு கேட்டு வந்த நபரிடம், நீங்கள் எந்த சாதி, மதம் என கேட்டுள்ளார். பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தால் வீடு தர முடியாது என்றும் அப்படி கொடுத்தால் தங்களது குலதெய்வம் கோபித்துக்கொள்ளும் என்றும் அந்த பெண் தெரிவித்திருக்கிறார். லட்சுமி பேசிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில் லட்சுமி மீது ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் மதுரை வீரன் என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் லட்சுமி மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Tags : List caste, house rent, family deity, female, case
× RELATED யானை தாக்கி விவசாயி பலி