ஐ.நா சபைக் கூட்டம்: ஒன்றிய அமைச்சர் குழு நியூயார்க் பயணம்

புதுடெல்லி: ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு நியூயார்க் சென்றுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று ெதாடங்கி வரும் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு அங்கு சென்றுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஒன்றிய வெளியுறவு ஜெய்சங்கர், ஜி 4 நாடுகளின் (இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி) அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்  விரிவான சீர்திருத்தம் கொண்டு வருதல் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகியோரை இந்திய வெளியுறவு அமைச்சர் சந்தித்து பேச உள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 24ம் தேதி உரையாற்றுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் வந்தடைந்தார். அவரை, ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் மற்றும் நியூயார்க் தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories: