×

குன்னூரில் தொடர் மழையால் ஆர்ப்பரித்து கொட்டும் கேத்ரீன் நீர்வீழ்ச்சி-பயணிகள் மகிழ்ச்சி

குன்னூர் : குன்னூரில் தொடர் மழை எதிரொலியாக கேத்ரீன் நீர்வீழ்ச்சி புத்துயிர் பெற்று, ஆர்ப்பரித்து கொட்டுவது சுற்றுலா பயணிகள் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.  
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் குளிர் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் பனி மூட்டம் நிலவுவதால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மேலும், அதிகாலை வேளையில் கடும் குளிர் நிலவுவதால் கேரட் அறுவடை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட முடியாமல் தொழிலாளர்கள்  கடும் அவதியடைந்து வருகின்றனர். தினமும் கடும் குளிரில் நடுங்கியபடி சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களது அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். கடும் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி ஊர்ந்து செல்கின்றன. இரவில் சாரல் மழையும் விடாமல் பெய்து வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக குன்னூர் கோத்தகிரி பகுதியில் உள்ள நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் புத்துயிர் பெற்றுள்ளது. டால்பின் நோஸ் பகுதியில் இருந்து பார்க்கும் போது கேத்ரீன் நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.மேலும் காட்டேரி நீர்விழ்ச்சிகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவது சுற்றுலா பயணிகள் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. இதனால் திடீர் அருவிகளின் அழகை மகிழ்ச்சியுடன் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் வெளியூர் பயணிகள் செல்கின்றனர்.

Tags : Katherine Waterfall ,Gunnur , Coonoor: In response to continuous rains in Coonoor, Catherine Falls revives and gushes to the eyes of tourists.
× RELATED மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!!