கடம்பூர் மலைக்கிராமத்தில் புலியின் நகம், பற்கள் பதுக்கிய 4 பேர் சிக்கினர்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் புலியின் பற்கள், நகங்கள் மற்றும் எலும்புகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடம்பூர் வனத்துறையினர் சின்ன உள்ளேபாளையம் கிராமத்தில் உள்ள சந்தோஷ் என்பவரது வீட்டை சோதனையிட்டனர். இதில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எறும்புதிண்ணி ஓடுகள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சந்தோஷ் (25), பத்ரிபடுகை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (29), மாதேவன் (45), ராஜப்பன் (37) ஆகிய நான்கு பேருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை பிடித்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் நான்கு பேரையும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: