விழுப்புரம் அருகே பார் உரிமையாளரை வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவம்: 4 பேர் கொண்ட கூலிப்படை சிக்கியது..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பார் உரிமையாளரை வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவத்தில் சதித்திட்டம் தீட்டிய மற்றொரு பார் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேல்மலையனூரில் பார் வைத்து நடத்தி வரும் ராஜாராம் என்பவர் கடந்த 13ம் தேதி அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே 5 பேர் கொண்ட கும்பலால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானார். வெட்டுக்காயங்களுடன் ஓடிய அவர் அங்கு வந்த மினி பேருந்தில் ஏறி உயிர்தப்பினார். அவரை கொல்ல திட்டமிட்டது வளத்தி சாலையில் 10 ஆண்டுகளாக பார் வைத்து நடத்தி வரும் செல்வம் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. தனது பாருக்கு அருகே 2 மாதங்களுக்கு முன்பு பார் தொடங்கிய ராஜாராமை கொலை செய்ய செல்வம் திட்டம் தீட்டியதாக போலீசார் கூறுகின்றனர்.

ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்த செல்வம் தனது சிறை நண்பரான புதுவை பெரியகாலப்பட்டு பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் கவுதம் மூலம் ராஜாராமை கொல்ல முயன்றார் என்பது குற்றச்சாட்டாகும். தலைமறைவாக இருந்த செல்வதை பிடித்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். கொலை வெறி தாக்குதல் நடத்திய காலப்பட்டு கவுதம், தாமஸ், மணி, சி.என்.பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்னரசு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Related Stories: