×

தைவான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க ராணுவம் தக்க பதிலடி தரும்: சீனாவுக்கு அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை..!!

வாஷிங்டன்: தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால் தக்க பதிலடி தரப்படும் என்று அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்திருக்கிறது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவான் எல்லையில் போர் பயிற்சியில் ஈடுபட்டு மறைமுக தாக்குதல் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதற்கு பின்னரும், அமெரிக்க எம்.பி.க்களும், அமெரிக்க மாகாண ஆளுநர்களும், தொடர்ந்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அமெரிக்கா - சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றமான சூழலில் தைவானுக்கு சுமார் 8,800 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அதிபர் ஜோ பைடன் அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோ பைடன், தைவானை அமெரிக்க படைகள் பாதுகாக்கும் என்று கூறினார்.

தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால் அமெரிக்க படை வீரர்கள் தைவானை பாதுகாப்பார்கள் என்று உறுதியாக கூறியுள்ளார். ஆனால் நேர்காணலுக்கு பிறகு பேசிய வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர், தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்றார். தைவான் தன்னை தானே தற்காத்துக்கொள்ள மட்டுமே அமெரிக்கா ராணுவ உதவி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : US military ,Taiwan ,President ,Joe Biden ,China , Taiwan, attack, US military, China, Joe Biden
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...