×

வங்கி மேலாளர் வீட்டில் கார் திருட்டில் ஈடுபட்ட பிரபல திருடன் நிக்சன் கைது: போலீஸ் விசாரணை

சென்னை : சென்னை கிழக்கு தாம்பரத்தில் வாங்கி மேலாளர் கிருபா வீட்டில் கைவரிசை கட்டிய பிரபல திருடன் நிக்சன் கைது செய்தனர். பிரபல திருடன் நிக்சன் மீது விருதுநகர், ராஜபாளையம் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது. கிருபா வீட்டை உடைத்து சென்றபோது எதுவும் சிக்காததால் வாயிலில் நின்றிருந்த காரை திருடி சென்றான். காரை திருடி சென்ற நிக்சனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் தேடி வந்தது இந்நிலையில் பல்லாவரம் அருகே சுற்றிவளைத்தபோது காரை விட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற நிக்சனை போலீஸ் மடக்கி பிடித்துள்ளது.


Tags : Nixon , Notorious thief Nixon arrested for car theft at bank manager's house: Police investigation
× RELATED வங்கி மேலாளர் வீட்டில் கார்...