முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு(பொறுப்பு) அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத் துறை செயலாளர் டி.ஜகந்நாதன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக துணை தூதர் எட்கர் பாங், எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் டிவிசன் முதுநிலை இயக்குனர் பிரான்சிஸ் சாங் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்தது ஒரு அற்புதமான தருணம். தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: