பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம் முழுவதும் தற்பொழுது காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது ஹெச்1 என்1, இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் குழந்தைகளுக்கு அதிகமாக பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள காய்ச்சலில் இருந்து நாம் விடுபட கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் காய்ச்சல் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும். அவர்களுக்கு கற்றல் தடைப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும்.

Related Stories: