×

சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி?

சென்னை: சமந்தாவுக்கு மீண்டும் ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டு  இருப்பதால், வெளிநாடு சென்று சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சருமநோய் பிரச்னை காரணமாக அவதிப்பட்ட அவர், படப்பிடிப்புகளில் அதிக மின்சார வெளிச்சத்திலும், வெயிலிலும் நடித்ததால் தனக்கு இதுபோல் அலர்ஜி ஏற்பட்டதாக சொன்னார். பிறகு 6 மாதங்கள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று குணமடைந்தார். அப்போது அவரைத்தேடி மணிரத்னம் இயக்கிய ‘கடல்’, ஷங்கர் இயக்கிய ‘ஐ’ ஆகிய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஸ்கின் அலர்ஜி காரணமாக அவரால் அப்படங்களில் நடிக்க முடியவில்லை.

பிறகு சூர்யாவுடன் இணைந்து ‘அஞ்சான்’ படத்தில் நடித்தபோது சமந்தாவுக்கு இதே பிரச்னை ஏற்பட்டதால், உடனே படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, லண்டனிலுள்ள மருத்துமவனைக்குச் சென்று தீவிர சிகிச்சை பெற்றார். பிறகு தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லும் விதமாக, ‘அஞ்சான்’ படத்தின் பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்தார். தொடர்ந்து தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். இந்நிலையில், சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் இருந்து சமந்தா ஒதுங்கியுள்ளார். எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் அவர் திடீரென்று அமைதியாக இருப்பதை அறிந்த சிலபேர், ‘சமந்தாவுக்கு  மீண்டும் ஸ்கின் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் சினிமாவில் அதிக ஈடுபாடு செலுத்த முடியவில்லையாம்’ என்று சொல்லி வருகின்றனர்.

தற்போது இந்தியில் வருண் தவானுடன் வெப்தொடரில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடிக்கிறார். அவருடைய நடிப்பில் பல மொழிகளில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’,  ‘யசோதா’ ஆகிய படங்கள் அடுத் தடுத்து திரைக்கு வருகின்றன. சமந்தா உண்மையிலேயே ஸ்கின் அலர்ஜி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறாரா என்பது பற்றி அவரது தரப்பில் உறுதி செய்யவில்லை.

Tags : Samantha , Skin allergy for Samantha?
× RELATED உடல்நிலை பாதித்த என்னை விமர்சித்தனர்: சமந்தா உருக்கம்