வீரம் இந்தி ரீமேக்கில் சல்மான்கான் ஜோடியாக பூஜா ஹெக்டே

மும்பை: கடந்த 2014ல் சிவா இயக்கத்தில் அஜித் குமார், தமன்னா நடிப்பில் ரிலீசான படம், ‘வீரம்’. இப்படம் 2017ல் தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரிலும்,  2019ல் கன்னடத்தில் தர்ஷன், சனா திம்மய்யா நடிப்பில் ‘ஒடேயா’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தை இந்தியில் சல்மான்கான் ரீமேக் செய்வதாகவும், பிறகு அந்த முடிவை  மாற்றிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சல்மான்கான் தயாரித்து நடிக்கும் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற படம், ‘வீரம்’ படத்தின் ரீமேக்காக உருவாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு முதலில், ‘கபி ஈத் கபி தீவாளி’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென்று இப்போது ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’  என்று புதுப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு ‘யாரோ ஒருவரின் சகோதரர், யாரோ ஒருவரின் அன்புக்குரியவர்’ என்று அர்த்தம். இந்தப் படத்தில் சல்மான்கான் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

Related Stories: