ஆழ்வார்பேட்டை மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தியவர் கைது: 4 வடமாநில இளம்பெண்கள் மீட்பு

சென்னை: ஆழ்வார்பேட்டை மசாஜ் சென்டரில் வடமாநில இளம் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆழ்வார்பேட்டை பகுதியில் சிலர் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை மயக்கி, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும், சிலர் வாடிக்கயைாளர்களை கட்டாயப்படுத்தி பணம் பறிப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சமி தலைமையிலான தனிப்படையினர் கடந்த 16ம் தேதி ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மசாஜ் சென்டருக்கு வரும் வடிக்கையாளர்களிடம் வடமாநில இளம் பெண்களை காட்டி பாலியல் உணர்வை தூண்டி, அதன் மூலம் பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பல்லாவரம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த நிர்மல் ராஜ் (31) என்பவரை இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய வடமாநிலத்தை சேர்ந்த 4 இளம் பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: