×

பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான்களுக்கு ஐநா கண்டிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தடை விதித்து, அவர்களுக்கு கல்வி அளிக்க மறுத்து வருவதற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சி கைப்பற்றிய பிறகு பெண்களின் அடிப்படை பேச்சு சுதந்திரம், உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது, வெளியில் செல்லும் போது புர்கா அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், 7 வயது முதல் 12 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இவர்கள் பள்ளி செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இதனையொட்டி, நங்காகர், பர்வான் மாகாணங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு ‘ஓராண்டு இருண்ட காலம்’ என்ற தலைப்பில் கடிதம் எழுதி உள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான ஐநா தூதர் மார்கஸ் பொட்செல், `தலிபான் தலைமையிலான அரசு 7 முதல் 12 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பது வெட்கக் கேடானது. இது போன்ற அடிப்படை சுதந்திரம் பறிக்கப்படுவது பாதுகாப்பின்மை, வறுமை உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களை மேலும் தீவிரப்படுத்தும். எனவே, பெண் குழந்தைகளை பள்ளி செல்ல அனுமதிக்க வேண்டும்,’ என கடும் கண்டனம் தெரிவித்தார்.


Tags : UN ,Taliban , Denial of Education to Women: UN Condemns the Taliban
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...