×

தைவானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தைபே: தைவானில் அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8  மற்றும் 6.4 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. தைவானின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில், யூலி நகரின் அருகே 3 அடுக்குமாடி கட்டிடத்தின் 2 மேல் தளங்கள் இடிந்து விழுந்தன. இதில் 4 பேர் சிக்கினர். கட்டிடம் மேலே விழுந்ததில் மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்தன.

இதே போல், யூலி நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் கட்டிடம், பாலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் மீட்கப்பட்டார். மீதமுள்ள 3 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள சிஷங் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் டோங்லி ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் புரட்டி போடப்பட்டன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை மையம் தைவானை ஒட்டிய அந்நாட்டின் தென்பகுதி தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பின்னர், அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

Tags : Taiwan , A series of powerful earthquakes hit Taiwan
× RELATED மன்னிப்பு கேட்டார் தைவான் அமைச்சர்