×

ராமேஸ்வரம் கோயிலில் ஓபிஎஸ் திடீர் சிறப்பு பூஜை

ராமேஸ்வரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று சாமி தரிசனம், சிறப்பு பூஜை செய்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனது மனைவிக்கு வருடாந்திர திதி கொடுப்பதற்காக மகன் ஜெயபிரதீப் மற்றும் உறவினர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் வந்தார்.

தனியார் விடுதியில் தங்கிய அவர், நேற்று காலை ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடி விட்டு, மனைவிக்கு திதி கொடுத்தார். பின்னர் கோயில் அருகே திட்டக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு சங்காபிஷேக பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.

ராமேஸ்வரத்தில் இருந்து ஓபிஎஸ்சும், அவரது குடும்பத்தினரும் நேராக காசி செல்ல உள்ளதாக அவருடன் வந்திருந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஓபிஎஸ் வருகையை முன்னிட்டு அதிமுகவில் உள்ள அவரது ஆதரவாளர்கள், ராமேஸ்வரத்தில் அவரை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.

Tags : OPS ,Rameswaram Temple , Rameswaram Temple, OPS, Sudden Special Pooja`
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி