குஜராத் பெண் மாரடைப்பால் மரணம்: சென்னை விமான நிலையத்தில் பரிதாபம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் குஜராத்தை சேர்ந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்தார். குஜராத்  மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் விஷ்ணு கிரி (45). தொழிலதிபர்.  இவரது மனைவி கமலா பீன் (40). இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30  மணியளவில் புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் சென்னை  வந்தனர். பின்னர் இங்கிருந்து நேற்று அதிகாலை 4 மணி  விமானத்தில் அகமதாபாத் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் சென்னை  உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில்  புவனேஸ்வர் விமானம் தரையிறங்கியது. விமானத்தில் இருந்து விஷ்ணு கிரியும்  அவரது மனைவியும் கீழே இறங்கினர். அப்போது, கமலா பீன் திடீரென மயங்கி  கீழே விழுந்துள்ளார். அவரை விமான ஊழியர்கள் மீட்டு, அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே கமலா பீன் மாரடைப்பினால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: