குஜராத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ‘லம்பி’ வைரசால் 126 மாடுகள் பலி; தொற்று வேகமாக பரவுவதால் பீதி

மும்பை: குஜராத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் லம்பி வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால் இதுவரை 126 மாடுகள் இறந்ததாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. ஈக்கள், கொசுக்கள், ஒட்டுண்ணிகள் மூலம் பரவும் லம்பி வைரஸ், முதன் முதலாக குஜராத் மாநிலத்தை தாக்கியது. இந்த ெதாற்றால் மாநிலம் முழுவதும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்நோய் மகாராஷ்டிராவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் பசும்பால் மூலமாகவோ, விலங்குகள் மூலமாகவோ மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட மாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

லம்பி வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க பூச்சிக்கொல்லி  மருந்துகளை தெளிக்குமாறு மகாராஷ்டிர கால்நடை  பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், ‘மகாராஷ்டிராவில் லம்பி வைரஸ் தொற்றால் 126 மாடுகள் இறந்துள்ளன; 25 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றின் பாதிப்பு மாடுகளின் தோலில் புண்ைணை ஏற்படுத்தும் என்பதால் கால்நடை வளர்ப்போர் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பசு மற்றும் காளை மாடுகளுக்கு மட்டுமே லம்பி வைரஸ் நோய் பாதிப்பை ஏற்படுத்துவதால், மற்ற விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. தேவையற்ற வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: