திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரதமர் மோடி பிறந்த நாளில் உடல் உறுப்புகள், ரத்த தானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில், பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய, மாநில அரசு மற்றும் தேசிய நலவாழ்வு மையம் வழிகாட்டுதல்படியும் பாஜக மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் நடைபெற்றது. முகாமுக்கு பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.டில்லிபாபு தலைமை வகித்தார். இளைஞரணி நிர்வாகிகள் அபிலாஷ், ஜீவா, திலக அரசன், கார்த்திக், தாமோதரன் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், பாஜக மாவட்ட தலைவர் அஷ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் 74 பேர் ரத்ததானமும், 64 பேர் உடல் உறுப்பு தானமும் செய்தனர். அவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் கே.ஆர். ஜவஹர்லால், கல்லூரி துணை முதல்வர் ந.திலகவதி, ஆர்எம்ஓ ராஜ்குமார், மருத்துவர்கள் ஜெகதீசன், தமிழ்ச்செல்வி, செல்வம், குருதி பரிமாற்று அலுவலர் தே.பிரதீபா பாஜக மாநில ஒபிசி அணி செயலாளர் ஏ.ராஜ்குமார், மாவட்ட நிர்வாகிகள் இரா.கருணாகரன், ஆர்யா சீனிவாசன், லயன் சீனிவாசன், ஜெய்கணேஷ், சி.பி.ரமேஷ்குமார், சித்ராதேவி, நகரத் தலைவர் சதிஷ்குமார், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: