×

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு கொரோனா; ஆஸி.க்கு எதிரான தொடரில் இருந்து விலகல்.! உமேஷ் யாதவ் அணியில் சேர்ப்பு

மொலி: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி நாளை மறுநாள் மொகாலியில் நடக்கிறது. 2வது போட்டி நாக்பூரில் 23ம், 3வது போட்டி 25ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் மெகாலியில் அணியுடன் சேர இருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர் அணியில் இருந்து விலகினார். இருப்பினும் 28ம்தேதி தொடங்கும் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டி.20 தொடருக்கு முன் அவர் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இன்று மெகாலியில் அணியுடன் இணைகிறார். உமேஷ்யாதவ் 2 ஆண்டுகளுக்கு பின் டி.20க்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 34 வயதான உமேஷ் யாதவ் இந்திய அணிக்காக இதுவரை 7 டி.20 போட்டிகளில் ஆடி 9 விக்கெட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்கள் வலைபயிற்சி: முதல் டி.20 போட்டிக்காக இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, பும்ரா, ஹர்திக் பாண்டியா என அனைத்து வீரர்களும் நேற்று மொகாலி வந்தடைந்தனர். அவர்கள் இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். தலைமை பயிற்சியாளர் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மேற்பார்வையில் பயிற்சியை மேற்கொண்டனர். இதேபோல் ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று 2வது நாளாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். கேப்டன் பிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர். அடுத்த மாதம் டி.20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags : Corona ,Shami ,Aussies ,Umesh Yadav , Corona for Indian fast bowler Shami; Withdrawal from the series against Aussies.! Umesh Yadav joins the team
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...