×

எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு

கர்நாடகா: கட்டுமான ஒப்பந்தரரரும், எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு  செய்துள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீதான ஊழல் வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கமும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் புதிததாக குடியிருப்பு கட்டடுவதற்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. பெங்களூரு  பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தலைவராக இருந்த ஜி.சி.பிரகாஷ் மூலம் 12 கோடி ரூபாய் லஞ்சத்தை ராமலிங்கம் கொடுத்ததாக புகார்கள் எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி சம்பந்தி தொடர்புடைய 7 போலி நிறுவனங்கள் மூலம் லஞ்சம் பணம் கைமாறியுள்ளதாகவும் குற்றசாட்டு வைத்துள்ளனர். லஞ்சம் பணம் எடியூரப்பா மகனும், பாஜக மாநில துணை தலைவருமான விஜயேந்திராவுக்கு சென்று சேராதது தொடர்பான உரையாடல் வெளியானது. ஏற்கனவே முடிந்த ஒப்பந்த பணிகளுக்கான தொகையை வழங்க மேலும் ரூ.12.5 கோடி லஞ்சம் பேரம் பேசப்பட்டதாகவும் புகார் குவிந்துள்ளது. லஞ்சம் பேரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி ராமணலிங்கமும், எடியூரப்பாவின் பேரன் சசிதரன் பேசிய தொலைபேசி உரையாடலும் வெளியானது. தொலைபேசி உரையாடல் ஏற்கனவே தரப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் முக்கிய அரசு ஒப்பந்ததரராக உள்ள ராமலிங்கம் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளது என்று கூறியுள்ளனர்.

 தமிழ்நாட்டில் அரசுப்பணி ஒப்பந்தங்கள் விதிகளை மீறி ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளது. தற்போது ரூ.12 கோடி லஞ்சம் கொடுத்தாக கர்நாடக லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்திருப்பதால் ராமலிங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கட்டுமான ஒப்பந்தரரரும், எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஏர்டியூரப்பா மீதான ஊழல் வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 666.62 கோடி ரூபாய் ஒப்பந்தம் வழங்க 12 லஞ்சம் கைமாறியதாக கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : Karnataka Lok Ayukta Police ,Edappadi Paranichami ,Chamhandi ,Chandrakanth Ramalingam , Karnataka Lok Ayugda police register case against Edappadi Palanichami Sambandi Chandrakant Ramalingam
× RELATED 8 மாஜி அதிமுக அமைச்சர்கள், எடப்பாடி...