×

ஸ்ரீனிவாசன் விரைவில் சினிமாவில் நடிப்பார்: நடிகை தகவல்

திருவனந்தபுரம்: மலையாளத்தில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் போன்ற துறைகளில், இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் திறம்பட பணியாற்றியவர், ஸ்ரீனிவாசன் (67). கடந்த 1998ல் ‘சிந்தாவிஷ்டயாய ஷ்யாமளா’ என்ற படத்துக்காக தேசிய விருது பெற்றார். இந்த நிலையில், இதய நோய் காரணமாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேடையேறிய ஸ்ரீனிவாசனுடைய கன்னத்தில் மோகன்லால் முத்தமிட்டு வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீனிவாசனை நேரில் சந்தித்த மலையாள நடிகை ஸ்மினு சிஜோ வெளியிட்டுள்ள பதிவில், ‘சின்னச்சின்ன உடல் உபாதைகள் தவிர, ஸ்ரீனிவாசன் பூரண நலமுடன் இருக்கிறார். மீண்டும் உடல்நல ஆரோக்கியத்துடன் திரைக்கு வருவார்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Srinivasan , Srinivasan to act in cinema soon: Actress Info
× RELATED சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் லஞ்ச...