நான் என்ன கொள்ளைக்காரனா?...ரசிகர்களிடம் அஜித் கேள்வி

சென்னை: போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘ஏகே 61’ என்று தற்காலிகபெயர் கொண்ட படத்தில் நடித்து வருகிறார், அஜித் குமார். இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைத்த ஓய்வு நாட்களில், தன் பிஎம்டபிள்யூ பைக்கில் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும், பிறகு தனது நண்பர்களுடன் இமயமலையிலும், அடுத்து இமாச்சலப் பிரதேசத்தில் மனாலி, ரோதாங் ஆகிய பகுதிகளிலும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், ரசிகர்களுடன் அஜித் குமார் ஜாலியாகப் பேசும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அஜித் குமாரை நேரில் சந்திப்பதற்காக தேடி வரும் அவரது ரசிகர்கள், ‘உங்களை மூணு நாளா தேடிட்டு இருக்கோம் சார்’ என்று சொல்கின்றனர். உடனே அஜித் குமார், ‘தேடிட்டு இருக்கீங்களா. நான் என்ன கொலை காரனா? இல்ல, கொள்ளைக்காரனா?’ என்று சிரித்தபடி கேட்கிறார். உடனே ரசிகர்கள், ‘அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல சார். உங்களை எப்படி யாவது பார்க்கணும்... அதுதான்’ என்று ஆர்வத்துடன் சொல்கின்றனர். பிறகு அஜித் குமார் அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டு நலம் விசாரிக்கிறார். இத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

Related Stories: