×

லடாக் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் பாஜ தலைமையிலான மலை மேம்பாட்டு கவுன்சிலின் திமிஸ்காம் தொகுதி காங்கிரஸ் கவுன்சிலர் சோனாம் டோர்ஜெய் சமீபத்தில் இறந்தார். இதையடுத்து, இந்த இடத்துக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் தஷி துண்டுப்பும், பாஜ சார்பில் டோர்ஜாய் நாம்கியாலும் போட்டியிட்டனர். நேற்று காலை இந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 1,467 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், 14 வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகி இருந்தது. 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

மீதமுள்ள 1,449 வாக்குகளில் தஷி 861 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பாஜ வேட்பாளர் 588 வாக்குகளை பெற்றார். இதன்மூலம், திமிஸ்காமை காங்கிரஸ் மீண்டும் வசப்படுத்தி உள்ளது. 2020ம் ஆண்டு நடந்த இந்த கவுன்சில் தேர்தலில் 15 இடங்களை கைப்பற்றி பாஜ வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 இடங்களிலும், சுயேச்சை  வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

Tags : Congress ,Ladakh ,elections , Congress wins in Ladakh elections
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...