நேபாளத்தில் நிலச்சரிவு 17 பேர் பரிதாப பலி

காத்மண்டு: நேபாளத்தில் தொடர் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேரை காணவில்லை. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், லஸ்கு மற்றும் மகாகாளி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், வீடுகளும் 2  பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில், அச்ஹாம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பல்வேறு இடங்களில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

 இதில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 10 பேரை காணவில்லை. இவர்களை மீட்க,  ஹெலிகாப்டர்கள் மூலமாக தேடுதல் மற்றும் மீட்புபணிகள் நடந்து வருகின்றன. நேபாளத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் தொடர்ந்து உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: