×

திருவாலாங்காடு அருகே சிக்னல் பழுது; நடுவழியில் நின்ற திருப்பதி, கோவை ரயில்கள்

சென்னை: திருத்தணி அருகே திருவாலங்காடு பகுதியில் சிக்னல் பழுதால் திருப்பதி, கோவை மற்றும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் உரிய நேரத்தில் வேலைக்கு போக முடியாமலும், மற்றவர்கள் குறித்த நேரத்தில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். திருவள்ளூர் திருவாலங்காடு, மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பாயின்ட் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக அரக்கோணம் வழித்தடம் வழியாக கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டு, வேலை மற்றும் சொந்த ஊருக்கு செல்பவர்கள் ரயிலிலேயே உட்கார்ந்து இருந்தனர்.

அவர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும், தொழில் சம்பந்தமாக சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உள்ளூர் பயணிகள் பெரும்பாலானவர்கள் தண்டவாளம் வழியாக நடந்துசென்று பஸ்களை பிடித்து வேலைக்கு சென்றனர். தகவறிந்ததும் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து வந்தனர். பின்னர் பாயிண்ட் சிக்னல் கோளாறை சரி செய்தனர். இதன்பின்னர் அடுத்தடுத்து புறநகர் ரயில்கள் புறப்பட்டு சென்றது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்றவர்கள் என பலரும் பாதிப்பு அடைந்தனர். சுமார் 2 மணிநேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டு சென்றன.

Tags : Tiruvalangad ,Tirupati ,Coimbatore , Signal repair near Tiruvalangad; Tirupati and Coimbatore trains stopped midway
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது