திருவொற்றியூர் ராஜாஜி நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டுக்கு உட்பட்ட கார்கில் நகர், வெற்றி நகர் மற்றும் ராஜாஜி நகர் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் ஓரம், உயர் அழுத்த மின் கம்பி செல்லும் பாதைக்கு கீழே நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பலர் வீடு மற்றும்  கடைகளை கட்டி உள்ளனர்.

இந்நிலையில், ராஜாஜி நகர் பகுதியில் அரசு நிலத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிய 10 கடைகளுக்கு கடந்த ஆண்டு மாநகராட்சி அதிகாரிள் சீல் வைத்தனர். இந்த கடைகளை இடிக்க திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி நேற்று காலை மண்டல உதவி செயற்பொறியாளர் பாபு தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ராஜாஜி நகர் பகுதிக்கு வந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் 10 கடைகளையும் இடித்து அகற்றினர்.

Related Stories: