கண்ணகி நகர் 196வது வார்டில் கால்வாயில் அடைப்பு சாலையில் கழிவுநீர் தேக்கம்

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 196வது வார்டுக்கு உட்பட்ட கண்ணகி நகர், நகர்புற மேம்பாட்டு வாரியம் குடியிருப்பு பகுதியில் கடந்த பல வருடங்களுக்கு முன் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டன. தற்போது பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், அக்கால்வாயை தூர்வாரி சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: