இன்று பிறந்த நாள் கொண்டாடும் மோடிக்கு புடின் வாழ்த்து கூறாதது ஏன்? ரஷ்ய அதிபர் விளக்கம்

புதுடெல்லி: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் வாழ்த்து கூறாத நிலையில், அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். பிரதமர் மோடி இன்று (செப். 17) தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நேற்று அவர் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவின் அதிபர் புடினை சந்தித்தார். பிரதமர் மோடிக்கு இன்று பிறந்த நாள் என்று தெரிந்திருந்தும் அவர் (புடின்) மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியானது.

இதுகுறித்து புடின் அளித்த விளக்கத்தில், ‘இந்தியாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். நாளை (இன்று) என் அன்பான நண்பரின் (மோடி), பிறந்த நாளைக் கொண்டாடப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ரஷ்ய பாரம்பரியத்தின்படி என்னால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறமுடியாது. அதனால் இந்தியாவிற்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் (மோடி) தலைமையில் இந்தியா செழிக்க வாழ்த்துகிறோம்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: