விபத்தை தவிர்க்க உடுமலை சாலையில் சேதமடைந்த தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி  நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய சாலைகளில் ஒன்றான உடுமலை ரோடு,  சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில்  முதற்கட்டமாக மரப்பேட்டையிலிருந்து ஊஞ்சவேலாம்பட்டி வரை என சுமார்  மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு, இருபுறமும் இணைப்பு சாலையுடன்  6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.மையப்பகுதி மற்றும்  இரு இணைப்பு ரோடு அருகே என மூன்று மையப்பகுதியில் திட்டு அமைக்கப்பட்டது.  

அந்த திட்டுபோன்ற பகுதியில், ஒருபுறத்திலிருந்து மற்றறொரு புறத்துக்கு,  பாதசாரிகள் செல்வதை தவிர்க்கவும், விபத்தை கட்டுப்படுத்தவும்  இரும்பாலான  குழாயால் தடுப்பு அமைக்கப்பட்டது. இருப்பினும், அவ்வப்போது அதிவேகமாக  வரும் வாகனங்கள், சிலநேரத்தில் இரும்பு தடுப்புகளில் மோதி விபத்து  நேரிடும்போது, இரும்பு தடுப்புகள் வளைந்துள்ளது.இப்படி சுமார்  10க்கும் மேற்பட்ட இடங்களில், இரும்பு தடுப்பு சேதமடைந்தவாறு உள்ளதால், சாரையோரம் செல்வோர் மேலும் விபத்தை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது. எனவே,  வாகன போக்குவரத்து மிகுந்த உடுமலைரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பி  சேதத்தை சரிசெய்து, மேலும் விபத்து நேரிடுவதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: