×

இலங்கையில் தலைவிரித்தாடும் வேலையின்மை: 35 பணியிடங்களுக்கு வரிசையில் நின்ற 700 பேர்..கத்தார் ஏர்வேஸ் வேலையை பிடிக்க போட்டா போட்டி..!!

கொழும்பு: இலங்கையில் விமான நிறுவனத்தில் பணியாற்ற நடைபெற்ற நேர்முக தேர்வில் பங்கேற்பதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்புவில் உள்ள கத்தார் ஏர்வேஸ் விமான நிலையத்தின் கிளை அலுவலகத்தில் சில காலி பணியிடங்க்ளை நிரப்ப அந்நிறுவனம், நாளிதழ்களிலும், இணையதளத்திலும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக வேலையின்மை தலைவிரித்தாடும் இந்த சூழலில், ஆட்கள் தேவை விளம்பரத்தால் கவரப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கொழும்புவில் உள்ள கத்தார் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு தேனீக்களாக படையெடுத்தனர். கத்தார் ஏர்வேஸ் அலுவலக வாசலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இளைஞர்கள் அணிவகுத்து நின்றிருக்கும் காட்சி இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 40க்கும் குறைவான பணியிடங்களுக்கு 700க்கும் மேற்பட்டோர் திரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Sri Lanka , Sri Lanka,Unemployment,Jobs,Qatar Airways Jobs
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...