பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   

பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு  பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்வு அமைய வாழ்த்துகிறேன் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Stories: