100 நாடுகளில் வெளியாகும் இந்தி விக்ரம் வேதா

மும்பை: இந்தி விக்ரம் வேதா படம் 100 நாடுகளில் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படத்தை புஷ்கர் காயத்ரி தம்பதி இயக்கி இருந்தனர். இதன் இந்தி ரீமேக்கும் விக்ரம் வேதா பெயரிலேயே உருவாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கிறார். மாதவன் கேரக்டரில் சைப் அலிகான் நடித்துள்ளார்.

புஷ்கர் காயத்ரி இந்தியிலும் இயக்கியுள்ளனர். இப்படம் வரும் 30ம் தேதி ரிலீசாகிறது. இதுவரை இந்திய படம் எதுவும் வெளியாகாத வகையில், முதல்முறையாக 100 நாடுகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.ஐரோப்பாவில் மட்டுமே 22 நாடுகளில் வெளியாகிறது. ஆப்ரிக்காவில் 27 நாடுகளில் விக்ரம் வேதா ரிலீசாகிறது.

Related Stories: