ஷாருக்கானுடன் 250 பெண் ஸ்டன்ட் கலைஞர்கள் மோதல்: சென்னையில் படப்பிடிப்பு

சென்னை: அட்லி இயக்கும் ஜவான் படத்துக்காக 250 பெண் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஷாருக்கான் மோதும் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜவான்’. நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் நாயகிகளாக நடித்து வரும் இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் உருவாகி வருகிறது. ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னை அருகே பிரமாண்டமான செட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் 200 முதல் 250 பெண் ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர். ஷாருக்கானுடன் அவர்கள் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பெண் ஸ்டன்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் பலர் வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் என கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories: