நிஜத்தில் லிப் டு லிப் கிஸ் வாங்கினேன்: ரெஜினா ஓபன் டாக்

சென்னை: நிஜத்தில் லிப் டு லிப் கிஸ் வாங்கியிருக்கிறேன். அது எதிர்பாராத ஒரு அனுபவம் என்றார் நடிகை ரெஜினா. மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சந்திரமௌலி, சக்ரா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்பட பல படங்களில் நடித்தவர் ரெஜினா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். அவர் லிப் டு லிப் கிஸ் வாங்கிய சம்பவம் குறித்து கூறியது:

தெலுங்கில் நடித்துள்ள சாகினி தாகினி படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்தவர்கள் எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். இதனால் சந்தோஷத்தில் இருக்கிறேன். இந்த படத்தில் லிப் டு லிப் காட்சியில் நடித்திருக்கிறேன். படத்தில் இது முதல்முறை கிடையாது. பல படங்களில் லிப் டு லிப் காட்சியில் நடித்துள்ளேன்.

நிஜத்தில் இந்த அனுபவம் உண்டா என நிருபர்கள் கேட்கிறார்கள். நிஜத்தில் அப்படியொரு அனுபவம் கிடைத்தது. அதுதான் முதல் மற்றும் கடைசி அனுபவம். ஒருமுறை ஷாப்பிங் மாலுக்கு மும்பையில் சென்றிருந்தேன். அப்போது என்னை பார்த்து ரசிகர்கள் கூடிவிட்டனர். அப்போது ஒரு இளம்பெண், என்னை நெருங்கி வந்து எனது உதட்டுடன் அவரது உதட்டை இணைத்து முத்தம் தந்தார். நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர் அதை அன்பு மிகுதியால் செய்ததை உணர்ந்தேன். அதனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையே ஒரு ஆண் செய்திருந்தால், அவரை அறைந்திருப்பேன். இவ்வாறு ரெஜினா கூறினார்.

Related Stories: