உக்ரைனில் ஒரே குழியில் 400 சடலம்

இஷியம்: உக்ரைனில் ரஷ்யாவிடம் இருந்து  மீண்டும் கைப்பற்றப்பட்ட இஷியம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் குவிக்கப்பட்ட பிரமாண்ட மரண குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே பிப்ரவரியில் தொடங்கிய போர், 6 மாதங்களாக நீடிக்கிறது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இந்த பகுதிகளை 7 மாதங்களுக்கு பிறகு உக்ரைன் படைகள் தற்போது மீண்டும் வசப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இஷியம் பகுதியில் நேற்று முன்தினம் பெரிய மரண குழி கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 400க்கும் மேற்பட்ட சடலங்கள் இருக்கின்றன. மேலும் 30க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களின் சடலங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டு, வான்வழி தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் இங்கே புதைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. ரஷ்ய படைகள் இந்த படுகொலைகளை செய்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார்.

Related Stories: