திருப்பதிக்கு முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடை

திருமலை: ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிஜபத தரிசன சேவையில் நேற்று பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் தர்மா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி விஜய்சாய் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். தொடர்ந்து, முகேஷ் அம்பானி அன்னதான திட்டத்திற்கு ரூ.1.5 கோடி நன்கொடையாக  வழங்கினார். திருமலையில் உள்ள கோசாலைக்கு சென்று அங்குள்ள யானைக்கு வாழைப்பழம் வழங்கி ஆசிர்வாதம் பெற்றனர்.

Related Stories: