டி20 உலக கோப்பை இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு: ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக். 16ம் தேதி தொடங்கி நவ. 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் களமிறங்குகிறது. மொத்தம் 15 பேர் அடங்கிய அணியில் துஷ்மந்த சமீரா, லாகிரு குமாரா இடம் பெற்றுள்ளனர். காயத்தால் அவதிப்பட்டு வரும் இவர்கள், விரைவில் உடல்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், உலக கோப்பையில் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. அக். 16ம் தேதி தெற்கு கீலாங் மைதானத்தில் நடக்க உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணி நமீபா அணியுடன் மோதுகிறது. இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்ச, சமிகா கருணரத்னே, தனுஷ்கா குணதிலகா, தனஞ்ஜெயா டிசில்வா, துஷ்மந்த சமீரா, பதும் நிஸங்கா, வனிந்து ஹசரங்கா, லாகிரு குமாரா, குசால் மெண்டிஸ், மகீஷ் தீக்‌ஷனா, தில்ஷன் மதுஷங்கா, சரித் அசலங்கா, ஜெப்ரி வாண்டர்சே, பிரமோத் மதுஷன்.

Related Stories: