×

நியூசி. ஏ ஒருநாள் தொடர் சஞ்சு சாம்சன் தலைமையில் இந்தியா ஏ

புதுடெல்லி: நியூசிலாந்து ஏ அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள இந்தியா ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் செப். 22, 25, 27 தேதிகளில் நடக்க உள்ளன. இந்த தொடருக்கான இந்தியா ஏ அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

சாம்சன் தலைமையிலான அணியில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இளம் ஆல் ரவுண்டர் ராஜ் பவா (19 வயது) சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ: சஞ்சு சாம்சன் (கேப்டன்/கீப்பர்), பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெயிக்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் பத்திதர், கே.எஸ்.பரத் (கீப்பர்), குல்தீப் யாதவ், ஷாபாஸ் அகமது, ராகுல் சஹார், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாகூர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் பவா.

Tags : Newsy ,India ,Sanju Samson , Newsy. India A ODI series led by Sanju Samson
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...