மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளராக பவுச்சர்!

மும்பை: ஐபிஎல் தொடரில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக உள்ள பவுச்சர் (45 வயது), ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்குப் பிறகு பதவி விலகி மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய உள்ளார்.

ஐபிஎல், எமிரேட்சில் நடக்கும் ஐஎல் டி20, தென் ஆப்ரிக்காவின் எஸ்ஏ டி20 என மும்பை இந்தியன்ஸ் அணி உலக அளவில் பல்வேறு தொடர்களில் விளையாட உள்ளதால், இதுவரை தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த மகிளா ஜெயவர்தனே அந்த பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு உலக அளவில் எம்ஐ அணியின் செயல்பாட்டு பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்தே, மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: