காங்கிரஸ் ஆட்சி குறித்த நிர்மலாவின் ‘அரைவேக்காடு’ கருத்துக்கு ப.சிதம்பரம் பதில்

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘1991ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தங்கள் அரைவேக்காட்டுத்தனமானது,’’ என்றார்.  இதற்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘1991ல் கொண்டு வந்த பொருளாதார சீர்த்திருத்தங்களை ‘அரைவேக்காடு’ என நிதியமைச்சர் கூறி உள்ளார்.

கடவுளுக்கு நன்றி. ஏனென்றால், பணமதிப்பிழப்பு, பல விகிதங்களைக் கொண்ட ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீது கொடூரமான வரிகள் போன்ற மிதமிஞ்சி சமைத்த, சுவையில்லாத உணவுகள் எதையும் மன்மோகன் சிங் அரசு பரிமாறவில்லை. பல்கலைக் கழகத்தில் சமையல் மற்றும் பேக்கரி தொடர்பான படிப்பை நிதியமைச்சர் படித்துள்ளார் என்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி’ என பதிலடி தந்துள்ளார்.

Related Stories: