சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோஷ்டிக்கும், கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. ஓபிஎஸ் என்பது கோஷ்டி, நாங்கள் கட்சி. ஒரு கட்சி என்றால், மக்களுக்காக போராட வேண்டும். அவருக்கு பலம் இருந்தால், 75 மாவட்ட அமைப்பு ரீதியாக செயல்பட்டு இருக்க வேண்டும். அண்ணா பிறந்த நாள் கூட்டம், பொதுக்கூட்டம் நாங்கள் அறிவித்துள்ளோம். அவரிடம் கூட்டம் நடத்த ஆள் இல்லை. எந்த மாவட்டத்திலும் ஆள் இல்லை. பால், மின் கட்டணம், சொத்து வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் என்ன செய்ய வேண்டும், மக்களுக்காக போராட வேண்டியது அவரின் ஜனநாயக கடமை, இன்று ஆர்ப்பாட்டம், அண்ணன் எடப்பாடி அறிவித்து, மாவட்டம் முழுவதும் அதிமுக மக்கள் பிரச்னைக்காக போராடி வருகிறோம். ஆனால், ஓபிஎஸ்சுக்கு ஆள் பலம் இல்லை. தொண்டர் பலம் இல்லை. நீங்க கர்ணன் படம் பார்த்தீர்களா? அதில், கர்ணன் செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து, வஞ்சகத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, வஞ்சகன் தினகரனடா. தினகரனை நம்பி மோசம் போனாரு. ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டால், அவருக்கு மரியாதை இருந்திருக்கும். இப்போது, தொண்டர் இல்லை. மரியாதை இல்லை. இப்போது, சமூக வலைத்தளங்களையும், டிவிட்டரையும் நம்பிதான் ஓபிஎஸ் உள்ளார் என்று கூறினார்.