×

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுத்த பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது: ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என இடைக்கால கோரிக்கை வைத்துள்ளேன். இந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது. ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட (3, 4, 5, 6, 7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : General Assembly ,Edappadi ,Interim Secretary General ,ICourt , General Assembly resolutions electing Edappadi as Interim Secretary General should not be ratified: Case in ICourt
× RELATED தேர்தல் பிரசாரத்திற்கு குறுகிய...