தூத்துக்குடியில் 5 குழந்தைகளின் தாயை கடத்தி பலாத்காரம்: ரவுடி உள்பட இருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் முருகன் என்ற கட்டை முருகன் (27). இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான முருகனும், இவரது நண்பரான கோகுல்ராம் (19) என்பவரும் பைக்கில் தாளமுத்துநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற 40 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். 5 குழந்தைகளின் தாயான அப்பெண்ணை ஒரு வீட்டில் அைடத்து வைத்து முருகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் அவரை அவரது வீட்டின் அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் தன்னுடன் வருமாறு கோகுல்ராமும் மிரட்ட பாதிக்கப்பட்ட பெண், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், முருகன் என்ற கட்டை முருகன், கோகுல்ராம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். முருகன், போலீசார் பிடியில் இருந்து பைக்கில் தப்பிச் செல்லும்போது தவறி விழுந்து கையை முறித்துக் கொண்டான்.

Related Stories: