சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இன்று கால் இறுதி போட்டிகள்

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவும், அர்ஜென்டினாவின் நடியா போடோரோஸ்காவும் மோதினர். இதில் போடோரோஸ்கா 3-6, 6-2, 7-6 என தாட்ஜனாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் போலந்தின் மேக்டா லினெட் 6-2, 6-0 என ரஷியாவின் ஒக்சனா செலக்மேத்வா வென்றார்.

இங்கிலாந்தின் கேட்டி ஸ்வான், 7-6 , 6-2 என ரஷியாவின் அனஸ்டசியா கசனோவாவை என்ற நேர் செட்டில் தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் 22 வயது வர்வரா கிராச்சேவா, 6-1, 7-5 என கனடாவின் கரோல் ஜாவோவை வென்றார். இன்று மாலை கால் இறுதி போட்டிகள் நடக்கிறது. இதில் வர்வரா கிராச்சேவா-செக்குடியரசின் லிண்டா, இங்கிலாந்தின் கேட்டி ஸ்வான்-ஜப்பானின் நாவோஹிபினோ, கனடாவின் ரெபேக்கா மரினோ-போலந்தின் மேக்டா லினெட், கனடாவின் யூஜெனி பவுச்சார்ட்-அர்ஜென்டினாவின் நதியா பொடோரோஸ் மோதுகின்றனர்.

Related Stories: