அரசு மருத்துவக் கல்லூரி அருகே காலி இடத்தில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரிக்கை

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு காந்திகிராமம் வழியாக பாதை இருந்தாலும், அம்மன் நகர் வழியாகவும் மற்றொரு சாலை செல்கிறது. இந்த சாலையின் வழியாகவும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில், மருத்துவமனைக்கு முன்னதாக, காலியிடத்தில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள் அள்ளப்படாமல் கொட்டப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அனைத்து தரப்பினர்களும் செல்லும் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள இந்த குப்பைகளை உடனடியாக அகற்றி, வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொண்டு கொட்ட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: