பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!!

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரை விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.10ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

Related Stories: