×

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி : 15 நாட்களாக விதிக்கப்பட்ட தடை நீங்கியதால் பயணிகள் உற்சாகம்

தேனி : கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்ததால் 15 தினங்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்ப் பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்காணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் கனமழை பெய்தது. இதனால், கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 31ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால், 15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்துள்ளது. தடை நீங்கியதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே, அருவி பகுதியில் குளிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரைக்கும் வந்து அருவியில் குளித்து மகிழ்ச்சியுடன் செல்வதாக வனத்துறையினரும் தெரிவித்தனர். 


Tags : Kumbakarai Falls , Kumbakkarai, waterfall, bathe, tourist, traveller, permit, traveller, excitement
× RELATED கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!