மஞ்சூர் - கோவை சாலையில் அரசு பேருந்து செல்ல இடம் கொடுத்து தனது குட்டியை அரவணைத்து நின்ற தாய் யானை.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவை மாவட்டத்திற்கு செல்லும் மூன்றாவது மாற்றுப்பாதையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மஞ்சூரில் இருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவை சென்றுள்ளது. அப்போது கெத்தை மலைப்பாதையில், பேருந்தை பார்த்தவுடன் தாய் யானை தனது குட்டியை அரவணைத்து தும்பிகையால் ஓரமாக அழைத்து சென்றது. பின்னர் அருகில் இருந்த யானையின் தூம்பிக்கையை இணைத்து குட்டியை பாதுகாத்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories: